இன்றைய ராசி பலன்கள்- (14-04-2023)

by Admin / 14-04-2023 12:32:08am
இன்றைய  ராசி பலன்கள்- (14-04-2023)

மேஷம்

ஏப்ரல் 14, 2023

 

 

பேச்சுக்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபார இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 2

 

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

 

 

அஸ்வினி : மாற்றங்கள் உண்டாகும். 

 

பரணி : ஆர்வமின்மை குறையும். 

 

கிருத்திகை : அனுகூலமான நாள்.

---------------------------------------

 

 

ரிஷபம்

ஏப்ரல் 14, 2023

 

 

உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குருமார்களின் ஆசீர்வாதம் மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். தள்ளிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உங்கள் மீதான வதந்திகளுக்கு தீர்வு கிடைக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 9

 

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

 

 

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

 

ரோகிணி : பிரச்சனைகள் நீங்கும்.

 

மிருகசீரிஷம் : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------

 

 

மிதுனம்

ஏப்ரல் 14, 2023

 

 

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படவும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களிடம் சாதுரியமாக பேசுவதன் மூலம் உங்களின் மீது நன்மதிப்பு உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 3

 

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

 

 

மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.

 

திருவாதிரை : கவனம் வேண்டும்.

 

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

---------------------------------------

 

 

கடகம்

ஏப்ரல் 14, 2023

 

 

கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். போட்டிகளில் பங்கு பெற்று பாராட்டுகளை பெறுவீர்கள். நண்பர்களின் உதவியின் மூலம் இழுபறியான சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். மேன்மை நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 2

 

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

 

 

 

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும். 

 

பூசம் : ஒத்துழைப்பு மேம்படும். 

 

ஆயில்யம் : இழுபறிகள் விலகும்.

---------------------------------------

 

 

சிம்மம்

ஏப்ரல் 14, 2023

 

 

விவாதங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். மற்றவர்கள் கூறும் கருத்துகளை பொறுமையுடன் கேட்டு முடிவெடுப்பது நல்லது. ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வமும், அதனால் விரயமும் உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 1

 

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

 

 

மகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

 

பூரம் : புரிதல் அதிகரிக்கும். 

 

உத்திரம் : விரயம் உண்டாகும்.

---------------------------------------

 

 

கன்னி

ஏப்ரல் 14, 2023

 

 

வருமானத்தை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். மனதில் புதுவிதமான சிந்தனையும், தன்னம்பிக்கையும் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 2

 

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

 

 

 

உத்திரம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 

 

அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

 

சித்திரை : தன்னம்பிக்கை உண்டாகும்.

---------------------------------------

 

 

துலாம்

ஏப்ரல் 14, 2023

 

 

வியாபார பணிகளில் எதிர்பார்த்த லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். தாயாருடன் அனுசரித்து செல்லவும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். புதிய வீடு மற்றும் கால்நடை சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 1

 

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 

 

 

 

சித்திரை : லாபகரமான நாள்.

 

சுவாதி : மாற்றங்கள் உண்டாகும். 

 

விசாகம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------

 

 

விருச்சிகம்

ஏப்ரல் 14, 2023

 

 

தன்னம்பிக்கையுடன் முக்கிய முடிவினை எடுப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். லாபகரமான நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 3

 

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

 

 

 

விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

 

அனுஷம் : ஆர்வம் உண்டாகும்.

 

கேட்டை : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------

 

 

தனுசு

ஏப்ரல் 14, 2023

 

 

வியாபார பணிகளில் நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். உங்கள் கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 5

 

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 

 

 

 

மூலம் : நெருக்கடிகள் மறையும். 

 

பூராடம் : தீர்வு கிடைக்கும். 

 

உத்திராடம் : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------

 

 

மகரம்

ஏப்ரல் 14, 2023

 

 

விளையாட்டான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். செய்கின்ற செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி நிமிர்த்தமான ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். முன்கோபத்தை குறைத்து கொள்ளவும். நண்பர்களின் வருகையால் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 2

 

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

 

 

உத்திராடம் : பேச்சுக்களில் தவிர்க்கவும்.

 

திருவோணம் : அனுசரித்து செல்லவும்.

 

அவிட்டம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------

 

 

கும்பம்

ஏப்ரல் 14, 2023

 

 

வியாபாரத்தில் உள்ள இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் மறைமுகமாக சில இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். தாமதம் குறையும் நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 3

 

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

 

 

 

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

 

சதயம் : இன்னல்கள் நீங்கும். 

 

பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------

 

 

மீனம்

ஏப்ரல் 14, 2023

 

 

மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நிர்வாக திறமைகள் வெளிப்படும். உழைப்புகள் நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 2

 

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம் 

 

 

 

பூரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.

 

உத்திரட்டாதி : அனுபவம் கிடைக்கும். 

 

ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

 

Tags :

Share via