டெல்லி சட்டசபை தேர்தல்: இன்று பிற்பகலில் தேதி அறிவிப்பு.

by Editor / 07-01-2025 09:55:09am
டெல்லி சட்டசபை தேர்தல்: இன்று பிற்பகலில் தேதி அறிவிப்பு.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று (ஜன., 07) பிற்பகல் 2 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 15ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடந்து இந்த தொகுதி காலியாக உள்ளது.

 

Tags : டெல்லி சட்டசபை தேர்தல்: இன்று பிற்பகலில் தேதி அறிவிப்பு

Share via

More stories