3நாட்களுக்கு தென்மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் உதயநிதி.

by Editor / 11-04-2024 09:31:31am
3நாட்களுக்கு தென்மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் உதயநிதி.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 11) கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்யவுள்ளார். குழித்துறையில் திறந்த வேனில் நின்றவாறு காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார். பின்னர், அங்கிருந்து அவர் திருநெல்வேலி மாவட்டத்திற்குச் செல்லவுள்ளார்.12ஆம்  தேதி தென்காசி மாவட்டத்திலும்,கோவில்பட்டி மற்றும் மாப்பிள்ளையூரணி,13 ஆம் தேதி திருச்செந்தூர்,தூத்துக்குடி பகுதிகளிலும் அவர் திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

 

Tags : 3நாட்களுக்கு தென்மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் உதயநிதி.

Share via

More stories

Logo