திமுகவினர் ஓடவும் செய்ய மாட்டார்கள்; ஒழியவும் செய்ய மாட்டார்கள்.- முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,
இன்று சென்னை விமான நிலையத்தில், சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனை முடித்து வந்த முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கடந்த 16 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இதய மருத்துவ பரிசோதனை செய்து வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பயந்து செல்லவில்லை என்றும் கடந்த மாதம் சிங்கப்பூர் செல்வதற்காக முன்கூட்டியே விண்ணப்பித்து 17ஆம் தேதி பயணப்பட்டதாகவும் திமுகவினர் ஓடவும் செய்ய மாட்டார்கள் ஒழியவும் செய்ய மாட்டார்கள் இப்படி எங்களுக்கு திமுக கற்றுக் கொடுக்கவில்லை என்றும் பதிலளித்ததோடு லஞ்ச ஒழிப்பு துறையில் 15ஆம் தேதி நேரில் ஆஜராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
Tags :


















