ஆட்சிக்கு வருவோம் என்று எதிர்பாராமலேயே வாக்குறுதிகளை அள்ளி வீசி இப்பொழுது நிதி நெருக்கடியில்த. வெ. க
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக வெற்றி கழகம் களவாடி ஆட்சி அமைத்துள்ளதாக சேலத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து.
சேலத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக வெற்றிக்காகவும் ஆறுமுக சட்ட மன்ற உறுப்பினர்களை களவாடி ஆட்சி அமைத்துள்ளதாகவும் இது நீண்ட காலம் நீடிக்காது என்றும் தெரிவித்தார். திமுக கூட்டணியின் வெற்றி பெற்ற கட்சிகளை இணைத்து தமிழக வெற்றி கழகம் தன் பலத்தை கூட்டி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்த முரண்பாடான கூட்டணி அரசு வெகு நாள் நீடிக்காது என்றும் மக்களுக்கு சேவை செய்து ஆட்சிக்கு வராமல் சமூக ஊடகப் பிரச்சாரங்கள் மற்றும் சினிமா கவர்ச்சியை மட்டுமே அடிப்படையாக வைத்து ஆட்சியைப் பிடித்து உள்ளதாகவும் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சர் ஆன விஜய் இன்னும் சினிமா பாணியிலேயே வசனம் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தார்.தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் கொலை, கொள்ளை மற்றும் போதை பொருள் புழக்கம் அதிகரித்து உள்ளதாகவும் ஆட்சிக்கு வருவோம் என்று எதிர்பாராமலேயே வாக்குறுதிகளை மக்களிடம் அள்ளி வீசி இப்பொழுது நிதி நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியதோடு பதவி சுகத்திற்காக அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர்களுக்கு அங்கு உரிய மரியாதை கிடைக்காமல் போகும் பட்சத்தில் மீண்டும் அதிமுகவிற்கு வர விரும்பினால் தங்களது அரசியல் பயணத்தை பூஜ்ஜியத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த முக்கிய முகங்கள் தங்களுக்கு வழங்கிய புதிய பதவிகளை ஏற்காமல் கூட்டத்தை புறக்கணித்தனர்.
Tags :



















