இந்தியாவில் தற்காலிகமாக ஊரடங்கு வேண்டும்: அமெரிக்க மருத்துவர்
அமெரிக்க அரசின் தலைமை மருத்துவரும், பெருந்தொற்று தடுப்பு நிபுணருமான அந்தோணி பவுசி ர் கூறியதாவது: இந்திய அரசு சில நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். தற்போது, இந்தியா கடுமையான மற்றும் நம்பிக்கையற்ற நிலையில் இருக்கிறது. நாடு முழுவதும் தற்காலிகமாக முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை உடனடி தேவையாக பெற்று, அதனை விநியோகிக்க வேண்டும்.சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதையடுத்து, அவர்கள் முழு ஊரடங்கை பிறப்பித்தனர். இந்தியாவில் 6 மாத காலம் அளவுக்கு ஊரடங்கு பிறப்பிக்க தேவையில்லை. பரவலை தடுக்க தற்காலிக ஊரடங்கை பிறப்பித்தாலே போதுமானது, மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
Tags :