மரத்தில் கட்டி வைத்து கொடூர தாக்குதல்
மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் நகரில் இந்த கொடூரம் நடந்துள்ளது. பத்திரிகையாளர் பிரகாஷ் யாதவ் (25) என்பவரை நர்மதாபுரத்தில் இம்மாதம் 25ஆம் தேதி மரத்தில் கட்டி வைத்து 6 பேர் கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், செருப்பால் கன்னத்தில் அறைந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். முன்விரோதம் காரணமாக பத்திரிகையாளரை மரத்தில் கட்டி வைத்து இரக்கமின்றி தாக்கியதாக தெரிகிறது. ஏறக்குறைய ஒரு மணி நேரம் கொடூரமாக தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Tags :