2 வது முறையாக மத்திய பட்ஜெட் டிஜிட்டல் முறையில் தாக்கல் ஆகிறது

by Admin / 27-01-2022 10:47:03am
 2 வது  முறையாக மத்திய பட்ஜெட் டிஜிட்டல் முறையில் தாக்கல் ஆகிறது

நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டானது அதிகமான பக்கங்களில் அச்சிடப்பட்டு துணிப்பைகளில் கட்டப்படும். 

இந்த அச்சிடும் பணிகள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சுமார் 2 வாரங்களுக்கு முன்பே தொடங்கி விடும்.

பட்ஜெட் ஆவணங்களில் நூற்றுக்கணக்கான பிரதிகள் அச்சிடப்படுவதால் ஏராளமான காகிதம் உள்ளிட்ட பொருட்களின் தேவை உள்ளது. 

காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் ஆவணங்களை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது.
 
இதனால் அச்சிடப்படும் பட்ஜெட் பிரதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளன. இதன் விளைவாக கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மத்திய பட்ஜெட்டை டிஜிட்டல் முறையில் தாக்கல்  செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

Tags : The federal budget is filed digitally

Share via