கடையநல்லூர் அரசு கல்லூரிக்கு கலைஞர் பெயர் சூட்ட கோரிக்கை.

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திரிகூடபுரம் ஒன்றிய கவுன்சிலர் அருணாசல பாண்டியன் கோரிக்கை மனுவின் அடிப்படையில் கடையநல்லூர் அரசு கல்லூரிக்கு கலைஞர் பெயர் வைக்க வேண்டும் என்று ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தற்போது கல்வித் துறை அமைச்சர் மூலமாக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது,கடையநல்லூர் அரசு கலைக்கல்லூரி கடந்த 2019 க்கு முன்னர் அந்த கல்லூரி மனோ கல்லூரி ஆக செயல்பட்டு வந்தது.
அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அந்தக் கல்லூரியில் 1300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்,
மாண்புமிகு தலைவர் அவர்கள் ஆட்சியில் கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போதும் அந்த கல்லூரிக்கு சுற்றுச் சுவர் கட்டுவதற்கும் சாலை அமைப்பதற்கும் நிதி ஒதுக்க வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த கல்லூரிக்கு கலைஞர் அவர்களின் பெயர் வைக்க வேண்டும் என்று ஏற்கனவே கொடுத்த கோரிக்கை மனுவையும்
மேற்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சரிடம் மனுவை முன்னாள் தெற்குமாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.
கோரிக்கை மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியின் போது மாவட்ட அவை தலைவர் சுந்தர மகாலிங்கம் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை முன்னாள் கடையநல்லூர் ஒன்றிய கழகச் செயலாளர் காசி தர்மம் துரை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர் .
Tags : கடையநல்லூர் அரசு கல்லூரிக்கு கலைஞர் பெயர் சூட்ட கோரிக்கை.