மதுரையில் வழக்கறிஞரை காரில் கடத்திய வழக்கில் 2 பேர் கைது

by Editor / 23-03-2025 10:35:10am
மதுரையில் வழக்கறிஞரை காரில் கடத்திய வழக்கில் 2 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் செந்தில் வேல் (வயது 32). இவருக்கும், அவரது உறவினரான பார்த்திபனூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் பணம் கொடுக்கல் - வாங்கல் தொடர்பான பிரச்சினை இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் தமுக்கம் காந்தி மியூசியம் செல்லும் சாலையில் செந்தில்வேல் வந்து கொண்டிருந்த போது அவரையும், அவரது டிரைவர் லட்சுமணனையும், சிலர் காரில் கடத்தி சென்றனர்.

 இதுகுறித்து அறிந்த தல்லாகுளம் போலீசார் துரிதமாக விசாரணை நடத்தி சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வைத்து செந்தில், லெட்சுமணன் 2 பேரையும் மீட்டனர். இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ராஜ்குமார் (31), மதுரையைச் சேர்ந்த மாரிமுத்து (23), ஸ்ரீகாந்த் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறை வாக இருந்த மதுரை ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்த கவுதம் (24), நாகபாலகுமரன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags : மதுரையில் வழக்கறிஞரை காரில் கடத்திய வழக்கில் 2 பேர் கைது

Share via