நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணும் பணி தொடங்கி...நடந்து வருகிறது.

by Admin / 20-03-2022 10:23:50am
நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணும் பணி தொடங்கி...நடந்து வருகிறது.


நடிகர் சங்கதேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நுங்கம்பாக்கத்திலுள்ள குட் செப்பர்ட் பள்ளியில் நடந்து வருகிறது.2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வாக்குகள் தனியார்
 பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலிருந்ததால்
 தேர்தல் முடிவு அறிவிக்கப்படாமலிருந்தது.1604 பேர் உறுப்பினராக இருந்து வாக்களித்த இத்தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான அணி,நடிகர் பாக்கியராஜ் தலைமையில் ஓர் அணியும் களத்திலிருந்தன. சமீபத்தில்  தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண சென்னை உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்திரவிட்டதை அடுத்து வாக்கு எண்ணும் பணி முன்னால் நீதிபதியும் தேர்தல் அதிகாரியுமான பத்பநாபன் தலைமையில் வாக்கு எண்ணும் பணி காலை 8.00 மணியிலிருந்து  நடந்து வருகிறது.

 

Tags :

Share via

More stories