முதல்வர் இருக்கைக்கு பின்னால் எச்சில் துப்பிய அமைச்சர் ராஜ கண்ணப்பன்

by Staff / 28-06-2024 05:09:12pm
முதல்வர் இருக்கைக்கு பின்னால் எச்சில் துப்பிய அமைச்சர் ராஜ கண்ணப்பன்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கள்ளச்சாராய விவகாரம் தொடங்கி நீட் விலக்கு வரை பல பிரச்சினைகள் அவையில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பின்னால் அமர்ந்திருக்கும் ராஜ கண்ணப்பன் அவர் இருக்கைக்கு கீழே எச்சில் துப்புகிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ராஜ கண்ணப்பன் பல சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், மீண்டும் சர்ச்சைக்கு இடமளிக்கும் விதமாக ராஜ கண்ணப்பன் நடந்து கொண்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo