போலியான பட்டம் டி.எஸ்.பி.உள்பட 9 பேர் மீதும் ஊழல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து 2020 ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த ஆவணங்கள் மூலமாக அரசு பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளைகள் வழக்கு தொடரப்பட்டது மதுரை உயர்நீதிமன்ற கிளை இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.
லஞ்ச ஒழிப்பு துறையினர் 2012 முதல் 2019 ஆண்டு வரை மதுரை காமராஜர் பல்கலை தொலைதூர கல்வி முலம் 4 பேர் தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலியான பட்டம் பெற்றதது தெரிய வந்தது. விசாரணையில் இவர்கள் தமிழ்நாடு தேர்வாணையம் முலம் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து வணிகவரி உதவி ஆணையர் சொப்னா, போலீஸ் டிஎஸ்பி கே.சி.சதீஷ்குமார், எம்.கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர், என்.ஏ.சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் மற்றும் உடந்தையாக இருந்த காமராஜர் பல்கலைகழக தொலைதூர கல்வி நிலைய அதிகாரிகள் சத்தியமூர்த்தி,புருஷோத்தாமன் உள்பட 9 பேர் மீதும் மதுரை ஊழல் தடுப்புப்பிரிவு போலீசார் முறைகேடாக அரசுப்பணி பெற்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags : போலியான பட்டம் டி.எஸ்.பி.உள்பட 9 பேர் மீதும் ஊழல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு.