கஞ்சா மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்ட 37 பேர் கைது.

by Editor / 22-02-2025 09:34:21am
கஞ்சா மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்ட 37 பேர் கைது.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் மேற்கொண்ட கடும் நடவடிக்கை காரணமாக, பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் பிப்ரவரி 20-ஆம் தேதி வரையிலான 12 நாட்களில் மாவட்டம் முழுவதும் சாராய விற்பனையில் ஈடுபட்ட 31 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் மதுவிலக்கு போலீசார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags : கஞ்சா மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்ட 37 பேர் கைது.

Share via