தேநீர் விருந்து ரத்து - கே.எஸ். அழகிரி விமர்சனம்

by Staff / 15-08-2023 02:51:17pm
தேநீர் விருந்து ரத்து - கே.எஸ். அழகிரி விமர்சனம்

ஆளுநர் மாளிகையில் இன்று (ஆகஸ்ட் 15) செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட திமுக கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது. இது குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, “அண்ணாமலை, இபிஎஸ்க்கு மட்டும் தேநீர் விருந்து வைக்க ஆளுநருக்கே சந்தோஷம் இல்லை. எங்கள் கூட்டணி சென்று டீ குடித்தால்தான் அவருக்கும் சந்தோஷம், மரியாதை” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via