கண் கலங்கிய பிரதமர் மோடி
நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலையில் தேசியக் கொடியை ஏற்றினார். 10வது முறையாக பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார்.அப்போது நாட்டின் வளர்ச்சி குறித்து பேசிக் கொண்டிருந்த அவர், திடீரென கண் கலங்கினார். இதனால் செங்கோட்டையே சில நொடிகள் மௌனமாகியது. பிறகு கண்ணை துடைத்துக் கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :