சாலையில் நடந்து சென்ற கர்ப்பினிபெண்ணுக்கு திடீரென பிறந்த ஆண் குழந்தை...

by Editor / 02-07-2024 05:39:47pm
சாலையில் நடந்து சென்ற கர்ப்பினிபெண்ணுக்கு திடீரென பிறந்த ஆண் குழந்தை...

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் குமாரபுரத்தை சேர்ந்த பிரேமலதா (33). 7 மாத கர்ப்பிணியான இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யாசகம் பெற்று வந்துள்ளார். கோவிலில் யாசகம் பெற்று விட்டு தமிழ்நாடு ஹோட்டல் அருகே நடந்து வந்தபோது திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வேறு எங்கும் செல்ல வழி இல்லாமல் சாலை ஓரத்திலேயே படுத்திருந்து அங்கேயே ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இதனை பார்த்த பக்தர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு தாயும், குழந்தையும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சைக்காக குழந்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. குழந்தைகளை கொண்டு செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் இல்லாததால், கோவில்பட்டியில் இருந்து அதற்கான ஆம்புலன்ஸ் வந்ததும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு தாயும் , குழந்தையும் அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட பிரசவம் பார்க்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடிக்கு குழந்தைகள் கொண்டு செல்வதற்கு அதற்கான வசதிகள் கொண்ட உரிய ஆம்புலன்ஸ் திருச்செந்தூரில் இல்லாததால் சில நேரங்களில் குழந்தைகள் உயிரிழந்து விடுகின்றனர். இதனால் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை கொண்டு செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு திடீரென குழந்தை பிறந்தது பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது.

 

Tags : சாலையில் நடந்து சென்ற கர்ப்பினிபெண்ணுக்கு திடீரென பிறந்த ஆண் குழந்தை...

Share via

More stories