தஞ்சை முன்னாள் எம்.பி காலமானார்

by Staff / 06-02-2024 02:19:44pm
தஞ்சை முன்னாள் எம்.பி காலமானார்

தஞ்சை முன்னாள் எம்.பி பரசுராமன் (63) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 2014இல் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வான இவர், தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். அதிமுக தலைமை மீது அதிருப்தியடைந்த அவர், சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via