2 குழந்தைகள் கொடூரமாக வெட்டிக் கொலை..

உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் பகுதியில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வினோத் குமார் மற்றும் அவரது மனைவி படவுன் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகின்றனர். அவர்களின் கடை எதிரில் ஜாவேத் என்பவரின் சலூன் கடை உள்ளது. இந்த நிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.சம்பவத்தன்று வினோத் குமாரின் வீட்டுக்குள் புகுந்த ஜாவேத், அவரது குழந்தைகளை கோடரியால் வெட்டிக் கொன்றார். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், சில மணி நேரங்களிலேயே குற்றவாளியை போலீசார் என்கவுன்டர் செய்தனர். குற்றவாளி ஜாவேத் தப்பிக்க முயன்ற போது போலீசாரை தாக்கியதாகவும், அதனால் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags :