மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு
மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் முன்னிலையில் நடைபெற்ற 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு.
மதுரை மாநகராட்சியில் 3 சங்கங்களை சேர்ந்த 6 ஆயிரம் தொழிலாளர்கள் 2 ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.இன்றுவரை நடைபெற்ற 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலை இருந்து வந்ததால் அவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதால் மதுரை மாநகராட்சி சாலைகளில் குப்பைகள் ஆங்காங்கே குவியல்குவியலாக சிதறிக்கிடந்த நிலையில் அதிகாரிகள் தரப்பினர் பெரிது பாதிக்கபட்ட நிலையில் அவர்களது 28 கோரிக்கைகள் நிறைவேற்றும் செய்வது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் முன்னிலையில் நடைபெற்ற 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. மாநகராட்சி - தொழில் சங்கங்கள் இடையே உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது,மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை நிறைவேற்றுவது தொடர்பாக எழுத்துப் பூர்வமாக உத்திரவாதம் அளித்தது.இந்த பேச்சுவார்த்தையில் துணை மேயர் நாகராஜன், மாநகராட்சிஅதிகாரிகள் பங்கேற்பு, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் பேட்டி மக்களின் நலன் கருதி போராட்டம் ஒத்தி வைக்கபட்டுள்ளதாகவும்,கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளது என்றும்,01 ஆம் தேதி முதல் பணியாளர்கள் பணிக்கு செல்வார்கள் என்றும்தெரிவிக்கபடுத்துள்ளது.
Tags : Madurai Corporation cleaners return to work tomorrow