ரூ.98 கோடி செலவில் மேம்படுத்தப்படும் சென்னை காசிமேடு துறைமுகம்

by Editor / 10-05-2022 11:17:37pm
ரூ.98 கோடி செலவில் மேம்படுத்தப்படும் சென்னை காசிமேடு துறைமுகம்

சென்னையில் உள்ள துறைமுகம் பொறுப்பு கழக அலுவலகத்தில் சென்னை காசிமேடு துறைமுகத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் கலந்து கொண்டார். அப்போது, காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூ.98 கோடி செலவில் மேம்படுத்தப்படும். குளிர்சாதன வசதியுடன் கூடிய பதப்படுத்தும் அரங்கம், ஐஸ் குடோன் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தப்படும் என்றார்.

 

Tags : Chennai Kasimedu Port to be upgraded at a cost of Rs 98 crore

Share via