வகுப்பறைக்குள் செல்போன் கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை அமைச்சர் அன்பில் மகேஷ்

by Staff / 14-06-2022 02:21:02pm
வகுப்பறைக்குள் செல்போன் கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் கொண்டு வர அனுமதி கிடையாது என்றும் வகுப்பறைக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும் மாநில கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆன்லைன் மூலம் கல்வி கற்ற மாணவர்களின் மன இறுக்கத்தைப் போக்க ஐந்து நாட்கள் உளவியல் வகுப்புகள் தன்னார்வ அமைப்பினர் மூலம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். அரசு பள்ளிகளில் மாணவர்களை தக்கவைத்துக்கொள்ள கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக 9 ஆயிரத்து 494 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

 

Tags :

Share via

More stories