ஈமு கோழி மோசடி வழக்கில்  3 பேருக்கு 10 ஆண்டு சிறை

by Editor / 06-08-2021 07:19:03pm
ஈமு கோழி மோசடி வழக்கில்  3 பேருக்கு 10 ஆண்டு சிறை


 ஈமு கோழி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த யுவராஜ் உட்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


கடந்த 2012 ஆம் ஆண்டு பெருந்துறையில் ஈமூ கோழி நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பழனிச்சாமி என்பவர் புகார் அளித்தார். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் யுவராஜ், வாசு, தமிழ்நேசன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.


இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள முதலீட்டார் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் தீர்ப்பு  வழங்கப்பட்டது. அதில் யுவராஜ், வாசு, தமிழ்நேசன் ஆகிய மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 2.47 கோடி அபராதம் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி உத்தரவிட்டார்.


இதில் தமிழ்நேசன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாத்தால் அவருக்கு பிணையில் வரமுடியாத பிடிவாரண்டு பிரபித்து உத்தரவிட்டுள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் யுவராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via