காரை வெடிக்க செய்வேன்.. நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்

இந்தி நடிகர் சல்மான் கானுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை போக்குவரத்துத் துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த தகவலில், “நடிகரின் வீட்டிற்குள் நுழைந்து அவரைக் கொன்று விடுவதாகவும், அவரது காரை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன்" எனவும் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags :