காதலியை படுகொலை செய்த காதலன்
வங்கதேசத்தை சேர்ந்தவர் அபு பகர். இவர் கவிதா ராணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அபு பகர் கவிதா ராணியை தன் வீட்டுக்கு அழைத்த நிலையில் அவரும் வந்துள்ளார். அடுத்த நாள் அபு பகர் வேலைக்கு செல்லாமல் இருக்கவே, அவரின் முதலாளி அபு பகர் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அபு பகர் கவிதா ராணியை படுகொலை செய்தது தெரிய வந்து, காவல்துறைக்கு தகவலளித்தார்.காவல்துறையினர் அபு பகரை கைது செய்து விசாரித்ததில், அவர் கவிதா ராணியை துண்டு துண்டாக வெட்டி, டிபர் பாக்ஸில் அடைத்து வைத்தது தெரியவந்துள்ளது. அவற்றை மீட்ட போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :