மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நான்கு பெண்கள் லிப்டில் சிக்கி தவிப்பு.

by Editor / 26-04-2023 04:06:16pm
மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நான்கு பெண்கள் லிப்டில் சிக்கி தவிப்பு.

தென்காசி அரசு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நான்கு பெண்கள் லிப்டில் சிக்கி தவிப்பு உயிருக்கு போராடிய நிலையில் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டனர்.


தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட மருத்துவமனையில் இன்று காலை சுமார் 11 மணியளவில் மூன்றாவது மாடியில் இருந்து சங்கரன்கோவிலை சார்ந்த செல்வி தட்டாம்பாறை பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மாள் கற்குடியைச் சார்ந்த சுடலை மாடத்தி வி கே புதூர் பகுதியைச் சார்ந்த முத்துலட்சுமி ஆகிய நான்கு பெண்கள் உறவினர்களை சிகிச்சைக்காக அனுமதித்து விட்டு மேல் மாடியில் இருந்து கீழ் தரைத்தளத்திற்கு லிப்டில் வந்துள்ளனர் சுமார் 11 மணியளவில் லிப்டில் ஏரிய அவர்கள் திடீரென மின்சாரம் துண்டிப்பாகவே லிப்ட் பழுதாகியது  தொடர்ச்சியாக மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்படவும்  லிப்ட் செயல்படவில்லை 12:30 மணி வரை லிப்ட்டுக்குள் சிக்கி தவித்துள்ளனர். 4 பெண்களும் உயிருக்கு போராடிய நிலையில் சிக்கி தவிக்கவே அதனை அங்கு பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் நோயாளிகள் இது குறித்து மாவட்ட மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர் இதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் டாக்டர் ராஜேஷ் என்பவர் விரைந்து வந்து லிப்டில் சிக்கி இருந்தவர்களை காப்பாற்றுவதற்காக தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர்,காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் இதனை தொடர்ந்து காவல்துறையினரும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் துறையினரும் விரைந்து வந்தனர் விரைந்து வந்து லிப்டை உடைத்து பெண்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். நான்கு பெண்களும் இரண்டாவது தளத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்ததை தொடர்ந்து அவர்களை மீட்டனர் மேலும் 4 பெண்களுக்கு முதலுதவி அளிக்கப்படவில்லை.மூச்சு திணறல்  ஏற்பட்டு  குடிக்க தண்ணீர் கூட வழங்கப்படவில்லை.
தற்போது நான்கு நபர்களும் சகஜ நிலையில் மருத்துவமனை வளாகத்தில் அமர வைக்கப்பட்டனர் இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பெரும்பரப்பு ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட மருத்துவமனையில் தொடர்ந்து நோயாளிகளுக்கான பாதிப்புகள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டு எழுந்த நிலையில் இப்பொழுது  நிறுபனமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

One attachment • Scanned by Gmail

 

 

Tags :

Share via