தமிழகத்துக்கு ரூ.4,758 கோடி வரிப்பகிர்வு தொகையை மத்திய அரசு வழங்கியது

by Editor / 11-08-2022 02:19:06pm
தமிழகத்துக்கு ரூ.4,758 கோடி வரிப்பகிர்வு தொகையை மத்திய அரசு வழங்கியது

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மாதந்தோறும் வரித்தொகையை பகிர்ந்து அளிக்கிறது. இதன்படி நேற்று ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 665 கோடியே 75 லட்சம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இது வரிப்பகிர்வின் வழக்கமான மாதாந்திர தொகையின் 2 தவணைகள் ஆகும். இதில் தமிழகத்துக்கு ரூ.4,758.78 கோடி கிடைத்து இருக்கிறது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு ரூ.20,928.62 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது. பீகாருக்கு ரூ.11,734.22 கோடி வழங்கப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசத்துக்கு ரூ.9158.24 கோடியும், மேற்கு வங்காளத்துக்கு ரூ.8776.76 கோடியும், மராட்டிய மாநிலத்துக்கு ரூ.7369.76 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.7030.28 கோடியும், ஆந்திராவுக்கு 4,721.44 கோடியும், கேரளாவுக்கு ரூ.2,245.84 கோடியும், தெலுங்கானாவுக்கு ரூ.2,452.32 கோடியும் வழங்கப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via