எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பு

உதயநிதி ஸ்டாலின் மாய உலகத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்- எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம். சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரிகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால் அதற்கு வட்டி வசூல் செய்யும் அரசாங்கமாக இந்த அரசு உள்ளது என குற்றம் சாட்டினார். ஆசிரியர்கள் போராட்டம் குறித்தான கேள்விக்கு மு. க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டதில் இடம்பெற்றது தான் ஆசிரியர்களின் அந்த கோரிக்கை, என குறிப்பிட்ட அவர் அரசு பரிசீலித்து அவர்கள் அறிவித்த அறிவிப்பை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவித்தார். இந்த அரசாங்கம் ஒரு சர்வாதிகார போக்கில் உள்ளது என குறிப்பிட்ட அவர் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினையை சமூக வலைத்தளங்களில் எடுத்துச் சொன்னால் அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் குறிப்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடுவது தான் இந்த அரசின் வாடிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.
Tags :