கீழ்பாக்கம் மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்

by Staff / 06-10-2023 05:30:02pm
கீழ்பாக்கம் மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்

சென்னை கோயம்பேடு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கடந்த மே மாதம், டிராவல்ஸ் உரிமையாளர் செந்தில்ராஜா என்பவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 130 நாட்களாக புழல் சிறையில் இருந்த செந்தில்ராஜாவை, டி. என். ஏ. பரிசோதனைக்காக போலீசார் இன்று கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.இந்த நிலையில், கீழ்பாக்கம் மருத்துவமனையில் இருந்து போக்சோ கைதி செந்தில்ராஜா தப்பியோடியுள்ளார். இதையடுத்து கீழ்ப்பாக்கம் காவல்நிலைய போலீசார் விரைந்து வந்து செந்தில்ராஜாவை தேடினர். மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள மரங்கள் நிறைந்த பகுதி வழியாக அவர் தப்பிச்சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சி. சி. டி. வி. காட்சிகளை வைத்து போலீசார் செந்தில்ராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories