16 மாவட்டங்களில் கனமழை

by Staff / 09-12-2023 02:14:07pm
16 மாவட்டங்களில் கனமழை

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.
இதனால், இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணி வரை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய 16 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via