மத்திய அரசு சார்பில் பிரேரணா திட்டத்தில் மாநிலத்தில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று தென்காசி மாணவன் சாதனை

மத்திய அரசு சார்பில் பிரேரணா திட்டத்தில் மாநிலத்தில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று தென்காசி மாணவன் சாதனை --- இதில் பிரதமர் மோடியை சந்திக்க கூடிய வாய்ப்பு பெற்றது மகிழ்ச்சி என மாணவன் பெருமிதம்
மத்திய அரசின் கல்வித் துறை சார்பில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்கமளிக்கும் வகையில் பிரேரணா என திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் வாயிலாக மாணவர்களின் தலைமை பண்பு ஆற்றல் அதிகரிக்க கூடும் என்பதால் அதற்கான திட்டங்களையும் வகுத்து வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணத்தில் உள்ள கேந்திரா வித்யாலயா பள்ளியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று பிரேரணா திட்டத்தின் கீழ் கட்டுரை போட்டியில் பங்கேற்றனர்.
இதில் தென்காசியில் அமைந்துள்ள இசக்கி வித்தியாசரமம் பள்ளியின் சார்பாக கலந்து கொண்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவனான அருணேஸ்வரன் பங்கேற்ற நிலையில் மாநிலத்தில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த நிலையில் மாணவனை பாராட்டும் விதமாக பள்ளியின் நிறுவனரும், முன்னாள் அமைச்சரர், அம்பை சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா மாணவனுக்கு புத்தகத்தை பரிசாக அளித்து கௌரவித்தார்.
தொடர்ந்து மாணவன் இது குறித்து பேசுகையில், இதற்கு அடுத்த கட்டமாக நடைபெற உள்ள பிரணவ் என்ற பன்முக சிறப்பு திட்ட பயிற்சி முகாமில் கலந்து கொள்ள உள்ளதாகவும் இதன் வாயிலாக பிரதமரை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து இந்த திட்டத்தின் வாயிலாக இந்தியாவின் சிறப்பு பன்முகத்தன்மையும் தமிழ்நாடு மாநில கலைகள் மற்றும் சிறப்பம்சங்கள் கற்பிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற மாணவர்கள் தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் இந்தியாவின் பன்முகத்தன்மையின் பிற மாநிலங்களின் பல்வேறு கலைகளை பற்றி எடுத்துரைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :