13 வயது சிறுவன் கடத்தி கொலை
கிருஷ்ணகிரி: அஞ்செட்டி அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஜூலை 02) மாலை ரோகித் என்ற சிறுவனை இருவர் காரில் கடத்திச் சென்றனர். இதையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என சிறுவனின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அஞ்செட்டியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள வனப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவு பகுதியில் ரோகித்தின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Tags :



















