ராமதாஸுடன் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி சந்திப்பு

பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. நிர்வாகிகளின் வலியுறுத்தலுக்குப் பின் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (ஜூன் 5) ராமதாஸை நேரில் சந்தித்த அன்புமணி 1 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸுடன் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி சந்திப்பு நடத்தியுள்ளனர். இது அரசியல் கவனத்தை பெற்றுள்ளது. தந்தை-மகன் இடையே நிலவும் கருத்து முரண்பாட்டைப் பேசித் தீர்க்க முயற்சிகள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Tags :