நிலவில் மீண்டும் ஒரு அதிசயம் - ஆய்வில் புது தகவல்

by Staff / 10-10-2022 04:59:37pm
நிலவில் மீண்டும் ஒரு அதிசயம் - ஆய்வில் புது தகவல்

பூமியில் இருந்து 3.84 லட்சம் கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நிலவை பற்றி அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நிலவின் இருண்ட பக்கத்தில் என்ன உள்ளது என்று அறியும் ஆவலிலும் இந்த தேடல் அமைந்துள்ளது. இதற்காக இந்தியா சார்பில் சந்திரயான் விண்கலம் அனுப்பப்பட்டு அதற்கான பரிசோதனை முயற்சிகள் நடைமுறையில் உள்ளன.

இருப்பினும் நிலவின் தோற்றம் பற்றி அறிவதில் ஆராய்ச்சியாளர்களின் தேடல் தொடர்ந்து வருகிறது. நிலவு உருவாக பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கும் என கூறப்படுகிற நிலையில், புதிய ஆய்வு ஒன்று அதனை மறுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதற்காக துர்ஹாம் பல்கலை கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சூப்பர் கணினியை பயன்படுத்தி தூண்டுதல்களை உருவாக்கி நிலவின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இந்த ஆய்வில், 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்திருக்கும்? உள்ளிட்டவற்றை அறிவதற்காக, வெவ்வேறு மோதல் கோணங்கள், வேகம், கோளின் சுழற்சி, கோளின் நிறைகள் மற்றும் பிற விசயங்களை முன் வைத்து, நூற்றுக்கணக்கான மோதல்கள் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கணினி வழியே தகவல்களை சேகரித்துள்ளன.

இந்த புதிய கண்டுபிடிப்புகளின்படி, பெரிய அளவிலான மோதலானது, நிலவின் நிறை மற்றும் இரும்பு பொருட்களை உள்ளடக்கிய, மற்றொரு செயற்கைக்கோளை, பூமியின் ரோச் எல்லைக்கு வெளியே அதன் சுற்றுப்பாதையில் உடனடியாக நிலை நிறுத்த செய்ய முடியும் என தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo