“ஷாப்பிங் மாலில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது” - நீதிமன்றம் உத்தரவு

by Editor / 31-03-2025 02:10:01pm
“ஷாப்பிங் மாலில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது” - நீதிமன்றம் உத்தரவு

சென்னை திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகத்தில், வாகனங்கள் நிறுத்த, பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, வி.ஆர்.வணிக வளாகத்தில் வாகன நிறுத்த கட்டணமாக முதல் ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 வசூலிக்கின்றனர். அடுத்த ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தலா ரூ.30 வசூலிப்பதாக மனுதாரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்த விசாரணையில், கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via