அம்மனுக்கு வைரக்கிரீடம் அணிவித்து சிறப்பு வழிபாடு

by Staff / 08-03-2023 03:11:17pm
 அம்மனுக்கு வைரக்கிரீடம் அணிவித்து சிறப்பு வழிபாடு

கன்னியாகுமரி பகவதிஅம்மன்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று பகவதி அம்ம னுக்கு வைர கிரீடம் அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தமாசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு வைரக்கிரீடம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக அதிகாலை 4-30மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் 6மணிக்கு உஷ பூஜையும் உஷ தீபாராதனையும் நடந்தது. அதன் பிறகு நிவேத்தியபூஜையும் ஸ்ரீபலிபூஜையும்நடந்தது.

அதன்பின்னர் காலை 10 மணிக்கு அம்மன அதைத்தொடர்ந்து அம்மனுக்கு வைரக் கிரீடம் மற்றும் வைரக்கல் மூக்குத்தி மற்றும்தங்க ஆபரணங்கள்அணிவிக்கப் பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம்செய்தனர்.
இந்த மாசி மாதபவுர்ணமி வழிபாட்டில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம். எல். ஏ. தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில்நிர்வகத்தினர் செய்து இருந்தனர்.
 

 

Tags :

Share via