காமராஜர் போட்ட உணவால் தான் எட்டாம் வகுப்புவரை படித்தேன்-எம்.எல்.ஏ.பழனிநாடார். 

by Editor / 25-07-2024 07:11:22pm
காமராஜர் போட்ட உணவால் தான் எட்டாம் வகுப்புவரை படித்தேன்-எம்.எல்.ஏ.பழனிநாடார். 

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ.மூலம் சஷ்டியப்தசட்டநாத கரையாளர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இந்த பள்ளி 19 18 ஆம் ஆண்டு துவக்கப்பட்டதாகும்.இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளது. நகரின் மையப் பகுதியில் அனைத்து விதமான கட்டமைப்பு வசதிகள் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பள்ளியில் நூற்றாண்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சுமார் ஒன்றரை லட்சம் பேர் படித்து பயன்பெற்ற இப்பள்ளியில் பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் இப்பள்ளியில் பயின்று உயர்ந்த நிலையில் உள்ள ஆசிரியர் பெருமக்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்டு அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து பயின்ற மாணவர்கள் என அனைவரையும் அழைத்து கௌரவப்படுத்தப்பட்டனர் தொடர்ச்சியாக விழாவில் மாணவர்களின் அறிவாற்றலை வெளிப்படுத்தும் விதமாக கட்டுரை போட்டி பேச்சு போட்டி உள்ளிட்டவைகளும் நடைபெற்றன மேலும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் பள்ளியின் ஸ்தாபகர் வாரிசுகள் கௌரவப்படுத்தப்பட்டனர். மேலும் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவர்கள் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானவரும் கலந்து கொண்டனர்.
இந்த நூற்றாண்டு விழாவில் பேசிய தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார். தான் எட்டாவது வகுப்பு வரை படித்ததாகவும் காமராஜர் ஆட்சி காலத்தில் காமராஜரால் போடப்பட்ட உணவை உண்டுதான்  தான் 8 ஆம் வகுப்பு வரை படித்ததாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் பள்ளியில் படிக்கும் நண்பர்கள் எந்த அளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் அவர்களை பெயரைச் சொல்லி உரிமையோடு வாடா போடா என்று அழைக்கும் தகுதி பள்ளிப்பருவ நட்பு மட்டுமே நிலைக்கு என்றும் தெரிவித்தார்.

 

Tags : காமராஜர் போட்ட உணவால் தான் எட்டாம் வகுப்புவரை படித்தேன்-எம்.எல்.ஏ.பழனிநாடார். 

Share via

More stories