மக்களை பாதிக்காமல் புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை - தமிழக அரசு

by Editor / 22-01-2025 06:38:24am
மக்களை பாதிக்காமல் புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை - தமிழக அரசு

பரந்தூரில் சென்னையில் இராண்டவது விமான நிலையம் அமைவதால் மருத்துவம், சுற்றுலா முதலிய துறைகள் பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என்பதால் மக்கள் பாதிக்கப்படமால் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரின் இரண்டாவது பெரிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரமும், நலன்களும் எந்தவகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கும் பொருளாதார மேம்பாடுகளுக்கும் உறுதுணையாக அமையும் என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது.

பரந்தூர் பகுதியின் நீர்நிலைகளையும் எந்த அளவிற்கு சீர்செய்ய முடியும் என்பதை ஆராய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் பரிந்துரைகளையும் அரசு கவனத்தில் கொள்ளும்.

இந்திய விமான ஆணையம் மேற்கொண்ட சாத்தியக்கூறு ஆய்வின் கண்டுபிடிப்புகள் மற்றும் TIDCO மேற்கொண்ட மேலும் விரிவான பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில், பின்வரும் காரணங்களுக்காக கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு பண்ணூரை விட பரந்தூர் தளம் மிகவும் பொருத்தமான தளமாக உருவெடுத்துள்ளது:

 

Tags : மக்களை பாதிக்காமல் புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை - தமிழக அரசு

Share via