டாஸ்மாக்கில் மார்ச் மாதம் முதல் கியூ ஆர் கோடு முறையில் மதுவிற்பனை-டாஸ்மாக் நிர்வாகம் தகவல்.
டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுப்பானங்களை விற்பதை தடுக்கும் வகையில், வரும் மார்ச் மாதம் முதல் கியூ ஆர் கோடு முறையில் மது விற்பனை அமல்படுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
டாஸ்மாக் மதுப்பான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என கடந்த 2024 ம் ஆண்டு அக்டோபர் மாதம் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை பிறப்பித்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில், தனிப்பட்ட ஊழியர்கள் செய்யும் தவறுக்கு அனைத்து ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்வது என்பது சட்ட விரோதமானது என வாதிடப்பட்டது. அரசுத்தரப்பிலும், இடையீட்டு மனுதாரர் தரப்பிலும், ஊழியர்கள் கூட்டு சேர்ந்து அதிக விலைக்கு மதுப்பானங்களை விற்பனை செய்து விட்டு, கூடுதல் தொகையை தங்களுக்குள் பங்கிட்டு கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
Tags : டாஸ்மாக்கில் மார்ச் மாதம் முதல் கியூ ஆர் கோடு முறையில் மதுவிற்பனை-டாஸ்மாக் நிர்வாகம் தகவல்.