“பாஜக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும்” - நமீதா

by Staff / 03-06-2024 02:30:15pm
“பாஜக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும்” - நமீதா

நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி கடந்த ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. நாளை (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் நடிகை நமீதா அளித்த பேட்டியில், “2019ஆம் ஆண்டு நான் பாஜகவில் சேர்ந்தபோது அனைவரும் என்னை தவறான முடிவு எடுத்ததாக விமர்சித்தனர். ஆனால் தற்போது நாடு நல்ல முன்னேற்றத்திற்கு சென்றுள்ளது. பாஜக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via