கனிமவளவாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

by Editor / 10-12-2024 08:28:30am
கனிமவளவாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த விசுவாசபுரம் பகுதியில் கனிமவளங்கள் ஏற்றி சென்ற 4 லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இன்று (டிச., 10) காலை நடந்த இந்த விபத்தில் 2 ஓட்டுநர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியை முந்த முயன்றபோது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து வந்த 2 லாரிகளும் அடுத்தடுத்து மோதின. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லாரிகளை மாற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

 

Tags : கனிமவளவாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

Share via