தீப்பற்றி எரிந்த பேருந்து... உயிர் தப்பிய 27 பயணிகள்

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பாயே கிராமத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று புனேவில் உள்ள பீமசங்கர் கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் மொத்தம் 27 பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதன் அடிப்பாகத்தில் இருந்து புகை வந்ததை கவனிக்காமல், ஓட்டுநர் தொடர்ந்து பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் இதை கவனித்து ஓட்டுநரிடம் தெரியப்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர், பேருந்தை நிறுத்தி பயணிகள் அனைவரையும் அவசர அவசரமாக கீழே இறக்கியுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே பேருந்து முழுவதுமாக தீப்பற்றி எரியத்தொடங்கியது. பயணிகள் அனைவரும் இறங்கிவிட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீக்கிரையாகின.
Tags :