மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 24 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போலிசார் குவிப்பு.

by Editor / 23-07-2023 09:15:08am
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 24 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போலிசார் குவிப்பு.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 24 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லையில் 1500 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.ஊதிய உயர்வு கோரி மனு அளிக்க ஊர்வலமாக வந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மீது 1999ம் ஆண்டு ஜூலை 23 ம் நாள் தடியடி நடத்திய போது தப்பிக்க தாமிரபரணி ஆற்றில் குதித்து 17 பேர் உயிரிழந்தனர்.இன்று பல்வேறு அரசியல் கட்சி அஞ்சலி செலுத்த உள்ள நிலையில் நெல்லை மாநகரம் முழுவதும்  போலிசார் குவிப்பு.

 

Tags :

Share via

More stories

Logo