வக்கீல் வெட்டிக்கொலை - 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

by Staff / 02-01-2024 04:39:18pm
வக்கீல் வெட்டிக்கொலை - 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே வர்கூர் பகுதியைச் சேர்ந்த வக்கீல் மணிகண்டன். இவர் கடந்தாண்டு நவம்பர் 3ஆம் தேதி செல்லிபாளையம் ஏரிக்கரை வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்து இவரை மர்ம நபர்கள் வெட்டினர். இதையடுத்து எருமைப்பட்டி போலீசார் 7 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா உத்திரவின்பேரில் குமரேசன், மகேஷ், சிவா ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories