திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலுக்கான திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பிறகு திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு க ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். ஆறு தொகுதிகள் தனித் தொகுதிகளிலும் 2 பொதுத் தொகுதிகளிலும் போட்டியிட தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தை கட்சி ஆறு இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை கூடுதலாக இரண்டு தொகுதிகள் விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
Tags :


















