சுமார் 480 கோடிக்கு விற்பனை

by Staff / 10-10-2022 11:57:07am
சுமார் 480 கோடிக்கு விற்பனை

வரலாற்றில் இதுவரை கிடைக்கப்பெற்ற வைரங்களிலே பிங்க் நிற வைரம் மிகவும் விலை உயர்ந்தது. ஹாங்காங்கில் சோதேபி ஏல நிறுவனம் 11.15 கரட் வில்லியம்சன் பிங்க் ஸ்டார் வைரத்தை 49.9 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்துள்ளது. இதன் உண்மையான மதிப்பு 21 மில்லியன் டாலர் தான். ஆனால் ஏலம் விடப்பட்டத்தில் ரூ. 49.9 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. 1947 ஆம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு 23.60 கரட் வில்லியம்சன் பிங்க் நிற வைரம் திருமண பரிசாக கொடுக்கப்பட்டது. இதையடுத்து, 2017 ஆம் ஆண்டு ஹாங்காங் ஏலத்தில் 59.60 கரட் பிங்க் நிற வைரம் 71.2 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி, சாதனை படைத்தது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.519 கோடி ஆகும்.

இதுவரை விற்கப்பட்ட வைரங்களில் இதுவே மிகவும் விலை உயர்ந்தது ஆக உள்ளது. இந்நிலையில் தற்போது 11.15 கரட் பிங்க் நிற வைரக்கல் 49.9 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏலத்தில் அதிக மதிப்பில் விற்பனையான வைரங்களில் இது இரண்டாவது இடத்தை பிடித்து உலக சாதனை படைத்துள்ளது.

 

Tags :

Share via
Logo