கிறிஸ்தவம். இஸ்லாம் மாறுபவர்களுக்கு பட்டியல் இன உரிமை கிடையாது - உச்சநீதிமன்ற நீதிபதிகள்

by Admin / 24-03-2026 03:15:02pm
 கிறிஸ்தவம். இஸ்லாம் மாறுபவர்களுக்கு பட்டியல் இன உரிமை கிடையாது - உச்சநீதிமன்ற நீதிபதிகள்

இந்து ,சீக்கிய அல்லது பௌத்த மதத்தை தவிர வேறு மதங்களுக்கு கிறிஸ்தவம். இஸ்லாம் மாறுபவர்களுக்கு பட்டியல் இன உரிமை கிடையாது. மதம் மாறிய உடனேயே அந்த உரிமை ரத்தாகிவிடும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. ஆந்திரா பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியார் தான் ஜாதி ரீதியாக இழிவுபடுத்தப்பட்டதாக கூறி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார் ஆனால் அவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பாதையாராக பணியாற்றி வருவதனால் அவர் பட்டியல் என சமூகத்தைச் சேர்ந்தவராக கருத முடியாது என்று கூறி ஆந்திரா உயர் நீதிமன்றம் அவரது வழக்கை தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் செய்த மனுவின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிகே மிஸ்ரா மற்றும் என்வி அஞ்சார்ய அடங்கி அமர்வு ஒரு நபர் வசம் பட்டியல் என சான்றிதழ் இருந்தாலும் அவர் வேறு ஒரு மதத்தை பின்பற்றும் போது அந்த சான்றிதழ் அவருக்கு அதற்கான உரிமைகளை வழங்காது என்று கூறியுள்ளது மதம் மாறியவர்கள் பட்டிலென மக்களுக்கான இட ஒதுக்கீடு அல்லது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழான பாதுகாப்பை கூற முடியாது என்றும் இந்த தீர்ப்பின் மூலம் மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது முன்னதாக 2024 நவம்பரில் ஒரு வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் சலுகைகளை பெறுவதற்காக மட்டும் மதம் மாறுவது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு செய்யும் துரோகம் என்றும் குறிப்பிட்டிருந்தது கவனத்திற்குரியது.

 

Tags :

Share via