விக்ரம் , ஆர்.ஆர்ஆர்.,கே.ஜி.எப் வரிசையில் பிரமாண்ட வெற்றிப்படம்.
கமல் ஹாசனின் ராஜ்கமல் பிச்சர்ஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் விக்ரம். பத்தல பத்தல பாடலுடன் படம் தொடங்குகிறது.படம் ஆரம்பத்திலிருந்து விறுவிறுவென்று ஒரு ஹாலிவுட் படம் போன்ற காட்சி அமைப்புகளுடன் நகர்கிறது. இடைவேளை வரை கதைப்போக்கும் நகர்வும் காட்சித்தொடர்பும் சரியாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. படம் முழுக்க வரும் பகத் பாஸில்- கமல்ஹாசன் இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டு நடித்துள்ளனர்.லிஜய் சேதுபதி முன்பு நடித்த படத்தின் சாயலில் நடித்துள்ளார்.வித்தியாசமான எந்தப்பங்களிப்பையும் அவர் செய்யவில்லை..முதல் விக்ரம் படத்திம் பெயரை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.மற்றபடி பழைய விக்ரமிற்கும் இதற்கும் தொடர்பில்லை சண்டை பிரமாதம் என்று சொல்ல முடியாது.ஒளிப்பதிவு,கலை,ரீரிக்கார்டிங் எல்லாம் சரியாக உள்ளது.சூர்யா வந்து போகிறார் படம் திரையரங்கில் பார்க்கையில் எல்லாத்தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தியுள்ளது.தியேட்டரில் இளைஞர்களும் யுவதிகளும் ஆட்டம் போட்டுக்கொண்டாடுகின்றனர்
Tags :