மூன்று பேரைக் கடித்துக் குதறிய கரடிக்கு ரேபிஸ் பாதிப்பு

by Editor / 10-11-2022 09:17:21pm
மூன்று பேரைக் கடித்துக் குதறிய கரடிக்கு ரேபிஸ் பாதிப்பு

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் வைகுண்டமணி. இவர் கடையம் சுற்றுவட்டாரப்பகுதியில் மசாலா வியாபாரம் செய்து வருகிறார். இவர் சிவசைலம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு என்ற கிராமத்திற்கு தனது பைக்கில் வியாபாரத்திற்கு சென்றார். அப்போது, சாலையின் குறுக்கே வந்த கரடி ஒன்று அவரது பைக்கை மறித்து கீழே தள்ளி அவரை கடித்து குதறியது. இதனையடுத்து, அந்த பகுதி வழியாக சென்றவர்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். மசாலா வியாபாரியை காப்பாற்ற முயன்ற பெத்தான்பிள்ளை குடியிருப்பத்தை சேர்ந்த சகோதரர்கள் நாகேந்திரன் மற்றும் சைலப்பன் ஆகியோரையும் கரடி கடித்தது. இதில் காயம்பட்ட 3 பேரும் நெல்லை அரசு மருத்துமனையில் சிகிச்சைபெற்றுவரும் நிலையில்  3 பேரை தாக்கிய கரடிக்கு ரேபிஸ் எனும் வெறிநோய் பாதிப்பு இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via

More stories