கடலூர் மாநாட்டில் எங்களுடைய கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடுவோம்-பிரேமலதா விஜயகாந்த் .

by Staff / 29-08-2025 09:30:21pm
கடலூர் மாநாட்டில் எங்களுடைய கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடுவோம்-பிரேமலதா விஜயகாந்த் .

 தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில்  தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பிரேமலதா விஜய்காந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் : 


தமிழக வெற்றி கழகம் குறித்து கேள்விகளுக்கு தினமும் பதில் அளித்து எங்களுக்கு சலித்து விட்டது. கடலூர் மாநாட்டில் எங்களுடைய கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடுவோம். தேமுதிக அங்கம் வைக்கும் கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். தென்மாவட்டத்தில் உள்ளம் தேடி இல்லம்  நாடி ரதம் விரைவில் வரவுள்ளது. இதன் மூலம் மக்களையும் கழக நிர்வாகிகளையும் சந்திக்கிறோம். டிசம்பர் மாதம் வரை எங்களுடைய கவனம் அனைத்தும் மக்கள் சந்திப்பிலேயே இருக்கும். ஜனவரி ஒன்பது தேமுதிக மாநாட்டில் எங்களது கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்போம். நாங்கள் அறிவிக்க கூட்டணி மகத்தான வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் காவல்துறை விசாரணை மரணம்  அதிகமாகி வருகிறது. போலீசார் விசாரணை என்ற பெயரில்  காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு அந்த நபருக்கு மரணம் ஏற்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது உண்மையிலேயே யார் தவறும் செய்தார்களோ அவர்களும் தண்டனை கொடுக்க வேண்டும். இனி இதுபோன்ற நடப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும். 

துணை ஜனாதிபதி தேர்தலில்  சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியில் இருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு தமிழக மக்களும் தமிழக அரசியல் கட்சிகளும் துணை நிற்க வேண்டும். தேமுதிகவின் நிலைப்பாடும் இதுதான். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக உள்ளார். இவர் வெற்றி பெற்றால் தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். இதுதான் தேமுதிகவின் கருத்து பொறுத்திருந்து பார்க்கலாம். 

தமிழகம் முழுவதும் கனிமவள கொள்ளைக்கு எதிராக  முதலில் குரல் கொடுப்பது தேமுதிக தான் ஆனால் இன்னும் கனரக வாகனங்களில் அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.. இதை யார் தடுக்க வேண்டும். தமிழக அரசு தான் இதை தடுக்க வேண்டும்.  காவல்துறை நீதி அரசர்கள்  என்ன செய்கிறார்கள்? இருக்கின்ற வளங்களை எல்லாம் அழித்து விட்டால் வருங்கால சந்ததி என்ன செய்யும் ? இப்படியே போய்க் கொண்டிருந்தால் நாட்டை விட்டு விட்டு செல்ல வேண்டியதுதான் 
 நம் நாட்டில் இருந்து வெள்ளையர்களை வெளியேற்றுவதற்காக நாம் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டோம்  தியாகிகளும் அதற்காக போராடி சுதந்திரத்தை பெற்று தந்தனர்
 வெள்ளையர்கள்  வெளியேற்றிவிட்டனர். தற்போது கொள்ளையர்கள் கையில் ஆட்சி உள்ளது. இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

 

Tags : கடலூர் மாநாட்டில் எங்களுடைய கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடுவோம்

Share via